Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரிய மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிலையங்களில் காவல் துறை சோதனை

தென் கொரியாவின் ஆகப் பெரிய மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிலையங்களில், காவல்துறையும் வருமான வரித்துறை அமைப்புகளும் இந்த வாரம் சோதனை நடத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -
தென் கொரிய மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிலையங்களில் காவல் துறை சோதனை

(படம்: Reuters)

தென் கொரியாவின் ஆகப் பெரிய மின்னிலக்க நாணயப் பரிவர்த்தனை நிலையங்களில், காவல்துறையும் வருமான வரித்துறை அமைப்புகளும் இந்த வாரம் சோதனை நடத்தியுள்ளன. அந்த நிலையங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் அந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

நாணயப் பரிவர்த்தனை நிலையங்களில் சூதாட்டம் நடைபெறுவதாகக் கிடைத்த வேவுத் தகவலின் அடிப்படையில் காவல்துறையும் அந்தச் சோதனையில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Coinone, Bithumb-உள்ளிட்ட பெரிய மெய்நிகர் நாணய நிறுவன அலுவலகங்களில் தேசிய வரிச்சேவை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக, அடையாளம் தெரிவிக்க விரும்பாத அவற்றின் பணியாளர்கள் சிலர் கூறினர்.

மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனையில் ஈட்டப்படும் பெருந்தொகை, குற்றச் செயல்களை அதிகரிக்கக் கூடுமெனத் தென் கொரியக் காவல்துறை சந்தேகிக்கிறது.  அதன் தொடர்பில், மெய்-நிகர் நாணயக் கணக்கு வசதியுள்ள ஆறு உள்ளூர் வங்கிகளைச் சோதித்து வருவதாக நிதித்துறை அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்