Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கு எதிரான தடை நீக்கம்

இலங்கையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு 18-வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இப்போது கடைகளிலிருந்து மதுபானம் வாங்க முடியும்.

வாசிப்புநேரம் -
இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவதற்கு எதிரான தடை நீக்கம்

(படம்: AFP)

இலங்கையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு 18-வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இப்போது கடைகளிலிருந்து மதுபானம் வாங்க முடியும்.

1955இல் அமலுக்குவந்த அந்தச் சட்டம், பாலினச் சமத்துவத்திற்கு எதிரானது என்றுகூறி அந்நாட்டு அரசாங்கம் தடையை நீக்கியது.

சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இலங்கையில் பெண்கள் மதுபானம் விற்கப்படும் இடங்களில் இப்போது வேலை செய்யலாம்.

இலங்கையில் பல பெண்கள் மாற்றத்தை வரவேற்துள்ளனர்.

இதற்கு முன் அவர்கள் மதுபானம் விற்கப்படும் இடங்களில் பணிபுரிவதற்கோ, பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்கோ உரிமம் பெற வேண்டியிருந்தது.

சிலரோ, சட்ட மாற்றத்தினால் பெண்கள் மதுபானப் பழக்கத்திற்கு அடிமையாகலாம் என்று கூறியுள்ளனர்.

இலங்கையில் பொதுவாகப் பெண்கள் மது அருந்துவதில்லை.

ஆனாலும் பெண்களின் மதுபானப் பழக்கம் கணிசமாய் அதிகரித்துவருவதாக 2016இல் இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா தெரிவித்துள்ளார்.

மதுபான ஒழிப்புக்கு எதிராக அவர் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்