Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கணவன் வரும்வரை ரயிலை நிறுத்திய மாது

கணவன் ரயிலில் ஏறுவதற்காக அதிவேக ரயிலை நிறுத்த முயன்றார் மாது ஒருவர்.

வாசிப்புநேரம் -

சீனா: கணவன் ரயிலில் ஏறுவதற்காக அதிவேக ரயிலை நிறுத்த முயன்றார் மாது ஒருவர்.

மூடவிருந்த ரயில் கதவுகளுக்கு முன்னால் நின்று ரயில் புறப்படுவதை அவர் தடுத்தார்.

குவாங்சோவிற்கு செல்லவிருந்த ரயிலில் அவர்கள் பயணம் செய்தனர்.

அந்த மாதும் அவரது மகளும் முதலில் ரயிலில் ஏறினர்.

நுழைவுச் சீட்டுக்கான சோதனை பகுதியில் கணவன் சிக்கிக்கொண்டார்.

கணவன் வரும்வரை ரயிலை நகரவிடப்போவதில்லை என்ற உறுதியுடன் அந்த மாது இருந்தார்.

அதிகாரிகள் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.

ஆனால் மீண்டும் கதவுகளுக்கு முன்னால் நின்று பயணத்துக்கு அந்த மாது இடையூறு விளைவித்தார்.

இறுதியில் கணவன் ரயிலைச் வந்தடைந்ததும், போராட்டத்தை நிறுத்திவிட்டு ரயிலில் அந்த மாது ஏறினார்.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தச் சம்பவம் தொடர்பான காணொளியைப் பலர் கண்டித்துள்ளனர்.

அவ்வாறு இடையூறு விளைவித்தவர்கள் எப்படி ரயிலில் அனுமதிக்கப்பட்டனர் என்று அவர்கள் வினவினர்.

தொடக்கப்பள்ளி ஆசிரியரான அந்த மாது, மற்றொரு காரணத்துக்காக தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்ததாக South China Morning Post நாளிதழ் தகவல் அளித்தது.

ரயில் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு அந்தப் பெண்ணுக்குச் சுமார் 300 டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்