Images
  • boat capsize
    படம்; AFP

இந்தியா: சமய விழாவில் படகு கவிழ்ந்ததில் 12 பேர் மரணம்

இந்தியாவின் போபால் நகரில் சமய விழாவின்போது படகு ஒன்று நீரில் மூழ்கியதில் 12 பேர் மாண்டனர்.

இன்று காலை சுமார் 25 பேரை ஏற்றிக்கொண்டு விநாயகர் சிலை ஒன்றை ஏரியில் கரைக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அங்கு மீட்புப்பணிகள் நடந்துவருகின்றன.

இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா இந்த வாரத்துடன் நிறைவடைகிறது. விழாக்காலத்தின்போது வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளைக் கடல், ஆறு, ஏரிகளில் கரைப்பது அங்கு வழக்கம்.

Top