Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனப் புத்தாண்டுக்காக ஹாங்காங்கில் ஆண்டுதோறும் நிகழும் வாணவேடிக்கை ரத்து

 சீனப் புத்தாண்டுக்காக ஹாங்காங்கின் விக்டோரியா துறைமுகத்தில் ஆண்டுதோறும் நிகழும் வாணவேடிக்கை இவ்வாண்டு ரத்து செய்யப்படும்.

வாசிப்புநேரம் -

ஹாங்காங்: சீனப் புத்தாண்டுக்காக ஹாங்காங்கின் விக்டோரியா துறைமுகத்தில் ஆண்டுதோறும் நிகழும் வாணவேடிக்கை இவ்வாண்டு ரத்து செய்யப்படும். அந்நகரில் நடந்த பேருந்து விபத்தில் 19 பேர் மாண்டதைத் தொடர்ந்து  ஹாங்காங் அரசாங்கம் அதனை அறிவித்தது.

கடந்த சனிக்கிழமை மாலையில்,  ஈரடுக்குப் பேருந்து கவிழ்ந்த சம்பவத்தில் 19 பேர் மாண்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வாணவேடிக்கையை ரத்துசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்குதல் கொடுத்ததை அடுத்து அரசாங்கம் அந்த முடிவை எடுத்தது.

சீனப் புத்தாண்டின் இரண்டாவது நாளில் வாணவேடிக்கை நடக்கவேண்டியது.

கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு மாறாக மக்கள், துயரத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களது அனுதாபங்களை வெளிப்படுத்த விரும்புவதாகவும் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்