Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பறவைக் காய்ச்சலைத் தடுக்க ஜப்பானில் 91,000 கோழிகள் அழிப்பு

ஜப்பானின் காகாவா (Kagawa) மாநிலக் கோழிப் பண்ணையில் 91ஆயிரம் கோழிகளை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
பறவைக் காய்ச்சலைத் தடுக்க ஜப்பானில் 91,000 கோழிகள் அழிப்பு

(படம்: Reuters)

ஜப்பானின் காகாவா (Kagawa) மாநிலக் கோழிப் பண்ணையில் 91,000 கோழிகளை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அதிகம் பரவக்கூடிய வகையைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அதற்குக் காரணம்.

இந்த வார முற்பகுதியில் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு, ஜப்பானில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.

H5N6 கிருமித் தொற்றால் ஜப்பானில், 2016ஆம் ஆண்டு நவம்பருக்கும், சென்ற ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடையில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான கோழிகள் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் கூறின.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்