Images
  • malaysia accident
    (படம்:MEDIA #DTTB / Facebook)

விபத்தின் காரணமாக காரிலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்ட பெண் குழந்தை மரணம்

மலேசியாவில் நடந்த கார் விபத்தில் 9 மாதப் பெண் குழந்தை மரணமடைந்தது.

அம்மா லிம் ஹுய் சீ கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது குழந்தை அப்பாவின் கைகளில் இருந்ததாகக் கூறப்பட்டது.

கார் வேறொரு வாகனத்தோடு மோதியதில், அப்பாவிடம் இருந்த குழந்தை வெளியே தூக்கியெறியப்பட்டு சாலையில் விழுந்தது.

நேற்று இரவு 7.30 மணிக்குச் சம்பவம் நடந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிரம்பானிலிருந்து டிட்டியில் உள்ள தங்கள் இல்லத்துக்குச் செல்லும் வழியில் காரின் கட்டுப்பாட்டை அம்மா இழந்து எதிர்த்திசையில் வந்த 2 கார்களுடன் மோதியிருக்கிறார். 

அந்தத் தாக்கத்தில் குழந்தை காருக்குள் இருந்து வெளியே வீசப்பட்டதாகக் கூறப்பட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெண் குழந்தை இன்று காலை 7.50 மணிக்கு மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

குழந்தைக்குத் தலையில் கடும் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னொரு வாகனத்தின் ஓட்டுனரான 23 வயது லுக்மான் அல் ஹக்கிம் ஃபொய்சாருக்குக் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன. 

விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்றாவது வாகனத்தின் ஓட்டுநருக்கும் பயணிக்கும் காயமேதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணை தொடர்கிறது. 

உங்கள் கருத்து

Top