Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'பொருள் சேவை வரி இல்லாவிட்டால் மலேசியாவில் நிதி பற்றாக்குறை நிலவலாம்': நஜிப்

மலேசியாவில் தற்போது வசூலிக்கப்படும் 6 விழுக்காட்டு பொருள், சேவை வரி மூலம் கிடைக்கும் வருமானம் இல்லை என்றால், நாட்டில் நிதிப் பற்றாக்குறை நிலவலாம் என்று அந்நாட்டு பிரதமர் நஜிம் ரசாக்  கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
'பொருள் சேவை வரி இல்லாவிட்டால் மலேசியாவில் நிதி பற்றாக்குறை நிலவலாம்': நஜிப்

(படம்: Reuters/Olivia Harris)

மலேசியாவில் தற்போது வசூலிக்கப்படும் 6 விழுக்காட்டு பொருள், சேவை வரி மூலம் கிடைக்கும் வருமானம் இல்லை என்றால், நாட்டில் நிதிப் பற்றாக்குறை நிலவலாம் என்று அந்நாட்டு பிரதமர் நஜிம் ரசாக் கூறியிருக்கிறார்.

எதிர்த்தரப்புக் கூட்டணி பக்காட்டான் ஹரப்பான் (Pakatan Harapan), ஆட்சிக்கு வந்தால், பொருள், சேவை வரியை அகற்றவிருப்பதாகக் கூறியதற்கு அவர் கருத்துரைத்தார்.

அந்த வரி, 2015ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
அந்த வரி இல்லை என்றால், ஆண்டுக்கு 45 பில்லியன் ரிங்கிட் வசூலிப்பது சத்தியம் அல்ல என்றார் திரு நஜிப்.

வசூலிக்கப்படும் பணம், கல்வி உதவி நிதி போன்வற்றின் மூலம், மக்களுக்கே திரும்பக் கொடுக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்