Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: விமான இயந்திரத்தில் கோளாறு - 65 சேவைகள் ரத்து

விமானங்கள் சிலவற்றிலுள்ள பழுதான இயந்திரங்களின் காரணமாக IndiGo,GoAir ஆகிய இந்திய விமான நிறுவனங்கள், 65 சேவைகள் வரை ரத்து செய்திருக்கின்றன.

வாசிப்புநேரம் -
இந்தியா: விமான இயந்திரத்தில் கோளாறு - 65 சேவைகள் ரத்து

(படம்: Reuters)

விமானங்கள் சிலவற்றிலுள்ள பழுதான இயந்திரங்களின் காரணமாக IndiGo,GoAir ஆகிய இந்திய விமான நிறுவனங்கள், 65 சேவைகள் வரை ரத்து செய்திருக்கின்றன.

அந்த இரண்டு நிறுவனங்களைச் சேர்ந்த A320Neo வகை விமானங்கள் எட்டில், இயந்திரங்கள் பழுதாய் இருப்பதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது.

அதன் காரணமாக சென்னை, பெங்களூர், புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலிருந்து புறப்படவிருந்த விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவில் IndiGo சுமார் 40 விழுக்காட்டு உள்நாட்டு விமானச் சேவைகளை வழங்குகிறது. GoAir நிறுவனம் 10 விழுக்காட்டுச் சேவைகளை இயக்குகிறது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்