Images
  • Jaya B
    (ஜெயா பச்சன். படம்: Reuters)

இந்தியாவின் ஆக அதிகப் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்

புதுடில்லி : நடிகையும் உத்தரப் பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயா பச்சன், இந்தியாவின் ஆக அதிகப் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடும்.

அரசாங்கத்திடம் அவர் அறிவித்த சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய். அதன்படி, பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கிஷோரைக் காட்டிலும் திருமதி ஜெயா பச்சன் பணக்காரராகத் திகழ்கிறார்.

2014ஆம் ஆண்டில் திரு. ரவீந்திர கிஷோர் மேலவைக்கு நியமிக்கப்பட்டபோது அவர் தமக்கு 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திருமதி ஜெயா பச்சனின் சொத்துமதிப்பு அதையும் தாண்டிவிட்டது.

Top