Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்து மாண்ட ஆடவர்

மலேசியாவில் கைதுசெய்ய வந்த காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க நினைத்து 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்த நைஜீரிய ஆடவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
காவல்துறை அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்து மாண்ட ஆடவர்

மலேசியக் காவல்துறையின் கார். (கோப்புப் படம்: AFP)

கோலாலம்பூர்: மலேசியாவில் கைதுசெய்ய வந்த காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க நினைத்து 13 ஆம் மாடியிலிருந்து கீழே குதித்த நைஜீரிய ஆடவர் மாண்டார்.

கோலாலம்பூரின் தேசா அமான் புரியிலுள்ள அடுக்குமாடி வீட்டில் மலேசியக் காவல்துறையினர் தேடுதல் நடத்தி வந்தனர்.

பொட்டலங்கள் தொடர்பான பண மோசடி ஒன்றில் 58 வயது மாது ஒருவர் தாம் 13,200 ரிங்கிட் ( 4,443 வெள்ளி) பணத்தை இழந்ததாகப் புகார் செய்ததை அடுத்து, காவல்துறையினர் அவ்வாறு நடவடிக்கை எடுத்தனர்.

மேசாடி தொடர்பில் மற்றொரு நைஜீரிய ஆடவரும் பிலிப்பீன்சைச் சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். பொட்டலங்கள் தொடர்பான 84 பண மோசடிச் சம்பவங்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை சுமார் 532 ஆயிரம் ரிங்கிட் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்