Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: 40 மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்தது - 4 பேர் பலி

40 மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு மீன்பிடிப் படகு மஹாராஷ்ட்டிர மாநிலத்திற்கு அருகே மூழ்கியது. குறைந்தது நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: 40 மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்தது - 4 பேர் பலி

(படம்: PUNIT PARANJPE / AFP)

இந்தியா: 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற ஒரு மீன்பிடிப் படகு மஹாராஷ்ட்டிர மாநிலத்திற்கு அருகே மூழ்கியது. குறைந்தது நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 32 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமற்போன நான்கு மாணவர்களுக்கான தேடல் பணிகள் நடந்து வருகின்றன. மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அந்தக் கடல்பகுதிக்குள் வரும் கப்பல்களை இந்தியக் கடலோரக் காவல்துறை திசைதிருப்பி வருகிறது.

பள்ளிச் சுற்றுலாவிற்காக கடற்கரைப் பக்கம் சென்ற மாணவர்கள் அங்கு மீன்பிடிப் படகில் ஏறினர். படகில் எடை கூடியதால் அது கவிழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.

இந்தியாவில் படகுகள் அடிக்கடி அளவுக்கு அதிகமான எடையோடு கடலுக்குள் செல்கின்றன. அவற்றுக்கான பாதுகாப்பு வழிமுறைகளும் வலியுறுத்தப்படுவதில்லை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்