Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மாட்டுக்கும் வந்தது விமானம் எடுக்கும் ஆசை

அஹமதாபாத் விமான நிலையத்தின் ஓடுபாதையில் மாடு ஒன்று அத்துமீறி நுழைந்தது.

வாசிப்புநேரம் -
மாட்டுக்கும் வந்தது விமானம் எடுக்கும் ஆசை

(படம்: AFP)

அஹமதாபாத், இந்தியா: அஹமதாபாத் விமான நிலையத்தின் ஓடுபாதையில் மாடு ஒன்று அத்துமீறி நுழைந்தது.

சரக்குகளைக் கொண்டு செல்லும் நுழைவாயில் வழியாக வந்த மாட்டினால் விமானச் சேவைகள் சிலவற்றை மாற்றிவிட வேண்டியிருந்தது.

அபுதாபியிலிருந்து அஹமதாபத்தில் தரையிறங்கவிருந்த விமானம் மும்பைக்கு மாற்றிவிடப்பட்டது. விமானங்கள் சில புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

விமான நிலைய அதிகாரிகள் மாட்டை ஓடுபாதையிலிருந்து அகற்ற 90 நிமிடங்கள் ஆனது.

விலங்குகள் அஹமதாபாத் விமான ஓடுபாதைகளில் நுழைவது இது முதல் முறையல்ல. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் முயல்கள் ஓடுபாதையில் நுழைந்ததால் விமானச் சேவைகள் தாமதமாயின.

நவம்பர் மாதத்தில் ஓடுபாதையில் நுழைந்த குரங்குகளால் சென்னைக்குச் செல்லவிருந்த விமானம் தாமதமானது.

இவ்வகையான சம்பவங்கள் பெரும்பாலும் கவனக்குறைவினால் நடப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அது தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்