Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் தவறாகப் பரவி வரும் வானிலைத் தகவல்கள்

 மலேசியாவின் சில பகுதிகளில் தட்பநிலை 17 டிகிரி செல்சியசுக்குக் குறைந்துள்ளதாகத் தான் தகவல் வெளியிடவில்லை என்று மலேசிய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் தவறாகப் பரவி வரும் வானிலைத் தகவல்கள்

(படம்: AFP)

கோலாலம்பூர்: மலேசியாவின் சில பகுதிகளில் தட்பநிலை 17 டிகிரி செல்சியசுக்குக் குறைந்துள்ளதாகத் தான் தகவல் வெளியிடவில்லை என்று மலேசிய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வலம் வரும் பதிவுகள், மலேசியாவின் டாவாவ் நகரில் தட்பநிலை 17.6 டிகிரி செல்சியசுக்குக் குறைந்துள்ளதாகவும், பொதுமக்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க மொத்தமான ஆடைகளை அணியுமாறும் பதிவுகளில் குறிபிடப்பட்டுள்ளன.

மலேசிய வானிலை துறை, இதுவரை பதிவான ஆகக் குறைவான தட்பநிலை 21 டிகிரி செல்சியஸ் என்று கூறியது. பெரும்பாலான பகுதிகளில் தட்பநிலை 21 டிகிரி செல்சியசாக இருப்பதாய் விளக்கம் அளித்துள்ளது.

மழைக்காலத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 14) வரை தட்பநிலை குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வானிலை குறித்த சரியான தகவலை பொதுமக்கள் அதன் இணையப்பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மலேசிய வானிலை துறை கேட்டுக்கொண்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்