Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முக்காடு அணிய வேண்டும் என்ற காரணத்தால் போட்டியிலிருந்து விலகிய சதுரங்க விளையாட்டாளர்

இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க விளையாட்டாளர்களில் ஒருவர் ஈரானில் நடக்கவிருக்கும் செஸ் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். ஈரானில் பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறார்.

வாசிப்புநேரம் -
முக்காடு அணிய வேண்டும் என்ற காரணத்தால் போட்டியிலிருந்து விலகிய சதுரங்க விளையாட்டாளர்

(படம்: AFP)

புதுடில்லி: இந்தியாவின் தலைசிறந்த சதுரங்க விளையாட்டாளர்களில் ஒருவர் ஈரானில் நடக்கவிருக்கும் சதுரங்க போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளார். ஈரானில் பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்கிறார்.

அந்தச் சட்டம் தமது உரிமைகளைப் பறிப்பதாகச் சுட்டியுள்ளார் சௌமியா சுவாமிநாதன். தமது உரிமைகளைத் தற்காத்துக் கொள்ள ஒரே வழி போட்டியிலிருந்து விலகுவது என்றார் அவர்.

விளையாட்டுகளில் சமயப் பழக்க வழக்கங்கள் வலியுறுத்தப்படக் கூடாது என்று சௌமியா கூறியுள்ளார்.

இதற்குமுன் 2016இல் டெஹ்ரானில் நடத்த உலக சதுரங்க போட்டிகளில் அமெரிக்க செஸ் வீராங்கனை முக்காடு அணிய மறுத்து போட்டியிலிருந்து விலகினார்.

2017இல் நடந்த போட்டிகளில் டோர்ஸா டெரக்ஷானி என்ற ஈரானிய விளையாட்டாளர் முக்காடு அணிய மறுத்ததால் அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் அமெரிக்காவைப் பிரதிநிதித்து விளையாடுகிறார்.

1979இலிருந்து ஈரானில் பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்பது சட்டம். பெண்கள் தங்கள் முகங்கள், கைகள், பாதங்கள் ஆகிய அங்கங்ளை மட்டும் காட்டலாம். அதிக வண்ணங்கள் கொண்ட ஆடைகளையும் அவர்கள் அணிய முடியாது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்