Images
  • Port Dickson

காருக்குள் நான்கு மணி நேரம் இருந்த சிறுமி மாண்டார்

தாயாரின் காருக்குள் நான்கு மணி நேரத்திற்கு விடப்பட்ட இரண்டு வயதுச் சிறுமி, இன்று மாண்டார். மலேசியாவின் போர்ட் டிக்சனில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

காலை 9 மணி அளவில் போர்ட் டிக்சன் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் நிறுத்தப்பட்ட காரில் தமது மகளை விட்டுச் சென்றார் கல்லூரி விரிவுரையாளரான அந்தத் தாய். ஆனால், தமது மகளைப் பற்றி மறந்தேபோனார். பின்னர், பிற்பகல் 1 மணி அளவில் அவருக்கு மகளைப் பற்றிய ஞாபகம் வந்ததால் உடனடியாக மகளைக் காண ஓடினார்.

ஆனால், அதற்குள் உணர்விழந்த நிலையில் சிறுமி காணப்பட்டதாக போர்ட் டிக்சன் காவல்துறையின் தலைமையதிகாரி ஸைனுதீன் அகமது கூறினார். மருந்தகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட மகள் மாண்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார் தலைமையதிகாரி ஸைனுதீன்.

உங்கள் கருத்து

Top