Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கண்களைச் சுழற்றிய செய்தியாளர் - இணையத்தில் சுழன்றுவரும் காணொளி

சீனாவின் தேசிய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது செய்தியாளர் ஒருவரின் நீண்ட கேள்வியைப் பார்த்து  நம்பமுடியாமல் மற்றொரு செய்தியாளர் செய்த தகாத செயல் இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

வாசிப்புநேரம் -

சீனாவின் தேசிய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது செய்தியாளர் ஒருவரின் நீண்ட கேள்வியைப் பார்த்து நம்பமுடியாமல் மற்றொரு செய்தியாளர் செய்த தகாத செயல் இணையத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் நேற்று நடைபெற்ற 13ஆவது தேசிய மக்கள் கூட்டத்தின்போது அந்தச் சம்பவம் இடம்பெற்றது. யீசாய் நிறுவனச் செய்தியாளர் லியாங் சிங்யீ (Liang Xiang) கேள்வியை நம்ப முடியாமல் தமது கண்களைச் சுழற்றினார்.

அரசாங்க செய்தி நிறுவனமான CCTV எடுத்த காணொளிகளில் பதிவான அந்தச் செயல் பின்னர் Youtubeல் பதிவேற்றம் செய்யப்பட்டது. அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய மாற்றங்கள், "இணைப்பும், பாதையும் திட்டம்" ஆகியவற்றைப் பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்தார் American Multimedia Television USA செய்தி நிறுவனத்தின் ஸாங் ஹுய்ஜூன்.

30 வினாடிகளுக்கு மேல் கேள்விகளைக் கேட்டதால் ஸாங் ஹுய்ஜூனை உற்றுப் பார்த்த லியாங் சிங்யீ கண்களைச் சுழற்றினார். வெட்டிக் கதை பேசுவோரைச் சந்திக்கும்போது ஏற்படும் மனநிலையை லியாங் சிங்யீயின் செயல் எடுத்துக்காட்டுவதாகப் பலரும் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்