Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாலியல் கொலை - விசாரணையைத் துரிதப்படுத்தும் காவல்துறை

வட இந்தியாவில் பாலியல் வன்முறை சம்பவத்தில் மாண்ட 23 வயது பெண்ணின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தவிருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாலியல் கொலை - விசாரணையைத் துரிதப்படுத்தும் காவல்துறை

2012-இல் இந்தியாவில் பாலியல் வன்முறையை எதிர்த்து போராட்டம் (படம் : REUTERS/Ahmad Masood)

வட இந்தியாவில் பாலியல் வன்முறை சம்பவத்தில் மாண்ட 23 வயது பெண்ணின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தவிருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

ரோதாக் நகரில் கடந்த வியாழக்கிழமை, அந்தப் பெண் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை, வேலையிடத்துக்கு வெளியிலிருந்து அந்தப் பெண்ணைச் சுமார் 6 ஆடவர்கள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவர் மாண்டதாகக் காவல்துறை கூறியது.

குற்றம் புரிந்தோருக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என அதிகாரிகள் முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

சம்பவத்தில் முக்கியச் சந்தேக நபராகக் கருதப்படும் ஆடவருடன் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட இளம் பெண்ணைக் கடந்த ஓராண்டாகச் சந்தேக நபர் திருமணம் செய்திகொள்ளும்படி நெருக்கடி அளித்தவந்ததாகக் கூறப்படுகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்