Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மலேசிய அதிகாரிகள் 16 பேர் கைது

போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புள்ள சந்தேகத்தின்பேரில், மலேசியாவின் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மலேசிய அதிகாரிகள் 16 பேர் கைது

கோலாலம்பூரில் அமைதுள்ள புக்கில் அமான் காவல்துறை தலைமையகம். (படம்: Google Maps)

ஈப்போ: போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புள்ள சந்தேகத்தின்பேரில், மலேசியாவின் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுப்புக் காவலில் இருக்கும் அதிகாரிகள், அவசர சோதனைகளைப் பற்றிய தகவல்களைப் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வெளியிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என துணைத் தலைமை அதிகாரி நூர் ரஷீட் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தீவரமாய்க் கண்காணித்து வருவதாகவும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் தக்க முறையில் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.

விசாரணை குறித்த மேல்விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

கைது செய்யப்பட்ட அதிகாரிகளில் துணைக் கண்காணிப்பாளரும், ஆய்வாளரும் அடங்குவர் என உள்ளூர் நாளேடு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்