Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து தாக்குதல் - கைதான மாவட்ட தலைவர் விடுவிப்பு

தாய்லந்தின் பட்டானி மாநிலத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களின் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மாவட்டத் தலைவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
தாய்லந்து தாக்குதல் - கைதான மாவட்ட தலைவர் விடுவிப்பு

படம்: Twitter@K5_Rescue

தாய்லந்தின் பட்டானி மாநிலத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களின் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மாவட்டத் தலைவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Big C பகுதிவாரிக் கடைத்தொகுதியில் நடந்த தாக்குதல்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை எனக் காவல்துறை விசாரணையில் தெரியவந்ததாக The Nation செய்தியில் தகவல் வெளியானது.

தடுத்துவைக்கப்பட்ட மாவட்ட அதிகாரியின் அடையாளம் வெளியாக்கப்படவில்லை.

கடந்த வாரம் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் 80 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரி தடுத்துவைக்கப்பட்டார்.

வாகனம் ஒன்று களவாடப்பட்டதற்கும் அதன் உரிமையாளர் கொலை செய்யப்பட்டதற்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 7 பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை வெளியானது.

அவர்களில் ஐவர் உள்ளூர்வாசிகள். ஒருவர் சமயத் தலைவர் என The Nation தகவல் கொடுத்தது.

கடைத்தொகுதியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்