Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் ஆமை கடத்தல் முறியடிப்பு

மலேசியச் சுங்கத்துறை அதிகாரிகள், கோலாலம்பூர் விமான நிலையத்தில், 300க்கும் மேற்பட்ட அரியவகை ஆமைகளை உயிரோடு கைப்பற்றியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் ஆமை கடத்தல் முறியடிப்பு

(படம்: New Straits Times)

மலேசியச் சுங்கத்துறை அதிகாரிகள், கோலாலம்பூர் விமான நிலையத்தில், 300க்கும் மேற்பட்ட அரியவகை ஆமைகளை உயிரோடு கைப்பற்றியுள்ளனர்.

அவற்றின் சந்தை மதிப்பு, சுமார் 1.2 மில்லியன் ரிங்கிட். (S$388,288)

ஆமைகள் 5 வெவ்வேறு பெட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்தன.

ஆமைகள் கடத்தப்படுவது குறித்து நேற்றுத் துப்பு கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

மடகாஸ்கரிலிருந்து ஆமைகள் எத்திஹேட் விமானத்தின் வழி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாகக் கூறிய சுங்கத்துறை, இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

மலேசியாவுக்குள் ஆமைகளை இறக்குமதி செய்வதற்கு மலேசிய வனவிலங்குத் துறையின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.

உரிய அனுமதியின்றி சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபடுவோருக்கு கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பை விட 20 மடங்கு அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அரியவகை ஆமைகள் பெரும்பாலும், இல்லங்களில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுவதுண்டு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்