Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: செல்ல நாயைக் கொல்லத் துணிந்த பெண்

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில், கட்டடம் ஒன்றின் ஆறாவது மாடியிலிருந்து ஒரு பெண் நாய் ஒன்றை வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

வாசிப்புநேரம் -

செங்டு: சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில், கட்டடம் ஒன்றின் ஆறாவது மாடியிலிருந்து ஒரு பெண் நாய் ஒன்றை வீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். அந்த நாய் குறித்துப் பெண்ணுக்கும் நாயின் உரிமையாளருக்கும் இடையிலான வாக்குவாதம் மோசமானதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நடந்தது.

நாயின் உரிமையாளர் குமாரி வூயின் நாய் லயன் கடந்த டிசம்பர் மாதம் காணாமல் போனது. அந்த நாயைத் தெருநாய் என நினைத்த இரண்டு ஆடவர்கள் ஹெ என்ற 34 வயது பெண்ணிடம் கொடுத்தனர்.
ஹெ அந்த நாயைத் தனது அடுக்குமாடி வீட்டில் வளர்த்து வந்தார்.

குமாரி வூ தமது நாய் ஹெயிடம் இருந்ததை அறிந்து அவரைத் தேடிச் சென்றார். அவரை உள்ளே அனுமதிக்க ஹெ மறுத்தார். சற்று நேரத்திற்குப் பின்னர் அந்த நாய் தரையில் மாண்டுக் கிடக்கக் காணப்பட்டது.

நாயை வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்று கூறுகிறார் ஹெ. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்