Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொரிய தீபகற்பத்தில் 'நல்ல மாற்றங்கள்' : சீன அதிபர்

கொரிய தீபகற்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சீன அதிபர் சீ சின்பிங் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

கொரிய தீபகற்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சீன அதிபர் சீ சின்பிங் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் தெரிவித்திருக்கிறார்.

இரு தலைவர்களும் தொலைபேசிவழி உரையாடியபோது திரு சீ அவ்வாறு கூறியதாய்ச் சீன அரசாங்க ஊடங்கள் குறிப்பிடுகின்றன.

வட கொரியாமீது அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் நெருக்குதலை அதிகரிக்கத் திரு டிரம்ப் திரு சீயை ஊக்குவித்திருக்கிறார்.

வட கொரியா அண்மையில் அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அத்துடன் அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன்னும் திரு டிரம்ப்பும் ஒருவரையொருவர் மிரட்டியுள்ளனர்.

ஆயினும் அண்மை வாரங்களாக இரு கொரியாக்களும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடர்பில் சந்திப்புகளை நடத்தி வருகின்றன. கனடாவின் வான்கூவர் நகரில் வடகொரிய அணுவாயுதத் திட்டம் குறித்து 20 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்கும் வேளையில் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்