Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

துவாஸ் சோதனைச் சாவடியில் செலுத்தவேண்டிய கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்படலாம் : மலேசியப் பிரதமர்

துவாஸ் சோதனைச் சாவடியில் செலுத்தவேண்டிய கட்டணங்களை மலேசிய அதிகாரிகள் மறுஆய்வு செய்யக்கூடும். பிரதமர் நஜிப் நஜிப் ரசாக் அது குறித்து அறிவித்தார்.   சிங்கப்பூர் மலேசியத் தலைவர்கள் சந்திப்புக்கு இடையே திரு நஜிப் செய்தியாளர்களிடம் பேசினார்.

வாசிப்புநேரம் -

துவாஸ் சோதனைச் சாவடியில் செலுத்தவேண்டிய கட்டணங்களை மலேசிய அதிகாரிகள் மறுஆய்வு செய்யக்கூடும். மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அது குறித்து அறிவித்தார். சிங்கப்பூர் மலேசியத் தலைவர்கள் சந்திப்புக்கு இடையே திரு நஜிப் செய்தியாளர்களிடம் பேசினார்.

துவாஸ் சோதனைச் சாவடிக் கட்டணங்களை மறுஆய்வு செய்வதன் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பரிசீலனை ஒன்றை முன்மொழிந்திருந்தார்.

உட்லண்ஸ் சோதனைச் சாவடிக்கு மாற்றாக துவாஸ் சோதனைச் சாவடியைப் பயன்படுத்த பயணிகளை அது ஊக்குவிக்கும். திரு லீ முன்மொழிந்த திட்டம் மலேசியாவுக்கு மிகவும் பிடித்திருந்ததாய்ச் சொன்னார் திரு நஜிப்.

தற்போது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி உச்சநேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அதிகம் பாதிக்கப்படுகிறது; பள்ளி விடுமுறைக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கிறது; இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகச் சொன்னார் திரு நஜிப்.

ஜனவரி முதல் தேதியிலிருந்து மலேசியா, EDL சாலைக் கட்டணத்தை ரத்து செய்ததை இரு தலைவர்களும் வரவேற்றனர். சிங்கப்பூரும் அதற்கேற்ப சாலைக் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து குறைக்கவிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்