Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை: அரசாங்கங்கள் மாறினாலும் ஒப்பந்தம் மாறாது

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை தொடர்பிலான இருநாட்டு இணக்கக் குறிப்பை வருங்கால அரசாங்கங்களும் தொடர்ந்து செயல்படுத்தும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை தொடர்பிலான இருநாட்டு இணக்கக் குறிப்பை வருங்கால அரசாங்கங்களும் தொடர்ந்து செயல்படுத்தும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருக்கிறார்.

சிங்கப்பூரில் அல்லது மலேசியாவில் அரசாங்கம் மாறினாலும் ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

ஒப்பந்தத்தில் உள்ளமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், போக்குவரத்து அமைச்சருமான திரு காவ் பூன் வானும், மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் திரு அப்துல் ரஹ்மான் டஹ்லானும் (Abdul Rahman Dahlan) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து திரு லீ அவ்வாறு கூறினார்.

மலேசியாவில் பொதுத்தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெற்றாக வேண்டும்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கப்பூரும் மலேசியாவும் ஒப்பந்தத்திற்கு உடன்பட்டே ஆகவேண்டிவரும் என்று திரு லீ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்