Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'ரெப்லர்' இணையச் செய்திப் பக்கத்தை மூடுவதில் உறுதியாகச் செயல்படும் பிலிப்பீன்ஸ் அரசாங்கம்

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே அரசாங்கம்,  அந்நாட்டிலுள்ள பிரபல செய்தி இணையப் பக்கம் ஒன்றை மூடுவதற்கான முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே அரசாங்கம், அந்நாட்டிலுள்ள பிரபல செய்தி இணையப் பக்கம் ஒன்றை மூடுவதற்கான முயற்சிகளைக் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறது.

"ரெப்லர்" (Rappler) என்ற ஊடக நிறுவனத்தின் வர்த்தகப் பத்திரங்களை ரத்து செய்ய முனைகிறது பிலிப்பீன்ஸ் அரசாங்கம். பீலிப்பீன்ஸ் மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள ஓர் ஊடகத்துறையில், அந்த நிறுவனம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட "ரெப்லர்", திரு டுட்டார்ட்டேக்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டுவருகிறது. போதைப்பொருளுக்கு எதிராக திரு டுட்டார்ட்டே விடுத்த போரில் சட்டவிரோதமாகப் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறும் செய்திக் கட்டுரைகளை "ரெப்லர்" வெளியிட்டு வருகிறது.

அந்நிறுனத்திற்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதை அம்பலப்படுத்தப் போவதாகக் கடந்த ஆண்டிலேயே திரு டுட்டார்ட்டே சூளுரைத்திருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்