Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா அகதிகளை 2 ஆண்டுகளுக்குள் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்ப இணக்கம்

ரொஹிஞ்சா அகதிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்புவதற்கு மியன்மாரும் பங்களாதேஷும் இணங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

ரொஹிஞ்சா அகதிகளை இரண்டு ஆண்டுகளுக்குள் சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்புவதற்கு மியன்மாரும் பங்களாதேஷும் இணங்கியுள்ளன.

மியன்மார் தலைநகர் நேப்பிடாவில் சந்தித்துப்பேசிய பங்களாதேஷ் அதிகாரிகள் அதனைத் தெரிவித்தனர்.

2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து பங்களாதேஷுக்குச் சென்ற ரொஹிஞ்சா அகதிகளுக்கே இது பொருந்தும்.  அதற்கு முன்பிருந்தே பங்களாதேஷில் வாழ்ந்துவந்திருக்கும் அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தாது.

ஆனால் பங்களாதேஷின் அகதி முகாம்களிலுள்ள ஏராளமான ரொஹிஞ்சா அகதிகள் மியன்மாருக்குத் திரும்பத் தயங்குகின்றனர். ரக்கைன் மாநிலத்தின் வன்முறைச் சூழல் குறித்த அச்சம் அதற்குக் காரணம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்