Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசிய அதிபரை ஃபேஸ்புக் பக்கத்தில் அவமதித்த இளையருக்குச் சிறை

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை (Joko Widodo) ஃபேஸ்புக் பக்கத்தில் அவமதித்த இளையருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய அதிபரை ஃபேஸ்புக் பக்கத்தில் அவமதித்த இளையருக்குச் சிறை

படம்: REUTERS/Dado Ruvic

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை (Joko Widodo) ஃபேஸ்புக் பக்கத்தில் அவமதித்த இளையருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அந்த 18 வயது உயர்நிலைப் பள்ளி மாணவர் சுமத்ரா (Sumatra) தீவில் உள்ள மேடான் நகரைச் சேர்ந்தவர்.

இணையத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததன் மூலம் இந்தோனேசியாவின் இணையச் சட்டத்தை மீறியதற்காக இளையருக்குச் சிறைத்தண்டனையுடன் 10 மில்லியன் ரூப்பியா ($990.50) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தைச் செலுத்தாவிட்டால் சிறைத்தண்டனை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும். அதிபர் விடோடோவையும் காவல்துறைத் தலைவர் டிட்டோ கர்னவியனையும் (Tito Karnavian) அவமதிக்கும் பல்வேறு பதிவுகளைச் செய்ததன் தொடர்பில் இளையர் கைதுசெய்யப்பட்டார்.

பொய்யான ஃபேஸ்புக்  கணக்குகளின் மூலம் அவர் அவ்வாறு செய்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தன்னைக் கைது செய்யச் சொல்லி இளையர் காவல்துறைக்குச் சவால் விட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஆகஸ்ட் மாதம் பிடிபட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்