Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"அமைதியைக் களங்கப்படுத்தும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - அதிபர் விடோடோ

இந்தோனேசிய அரசாங்கம் வெறுப்பைத் தூண்டும் பேச்சு, ஆத்திரத்தைத் தூண்டுவது போன்ற செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாசிப்புநேரம் -
"அமைதியைக் களங்கப்படுத்தும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - அதிபர் விடோடோ

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ. (படம்: AFP)

இந்தோனேசிய அரசாங்கம் வெறுப்பைத் தூண்டும் பேச்சு, ஆத்திரத்தைத் தூண்டுவது போன்ற செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் அத்தகைய செயல்பாடுகளை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் இராணுவத்துக்கும் அதிபர் ஜோக்கோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.

சமயத்தையோ, இனக்குழுக்களையோ அவமதிக்கும் அனைத்துச் செயல்களையும் பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என்று திரு. விடோடோ கேட்டுக்கொண்டார்.

அதிபர் மாளிகையில் பல்வேறு சமயத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் அதனைத் தெரிவித்தார்.

மக்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டுமென திரு. விடோடோ வலியுறுத்தினார்.

அடித்தளத் தலைவர்களுக்கு இடையிலான உட்பூசல்களை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் சமயத் தலைவர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்