Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பூர்வகுடி மாணவர்களுக்குக் கல்வியளிக்க, 130 கிமீ பயணம் செய்யும் ஆசிரியர்

 மலேசியாவில், பூர்வகுடியைச் சேர்ந்த சுமார் 450 மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக, தினமும் 130 கிலோமீட்டர் பயணம் செய்கிறார் ஆசிரியர் ஒருவர்.

வாசிப்புநேரம் -

கோலா லிப்பிஸ், மலேசியா : மலேசியாவில், பூர்வகுடியைச் சேர்ந்த சுமார் 450 மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக, தினமும் 130 கிலோமீட்டர் பயணம் செய்கிறார் ஆசிரியர் ஒருவர்.

அகமது சைடின் முகமது இட்ரிஸ் என்னும் அந்த ஆசிரியருக்கு வயது 40.

பஹாங் மாநிலத்திலுள்ள கோலா மேடாங் என்னுமிடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் தினமும் 65 கிலோமீட்டர் செல்கிறார் சைடின். 

லிப்பிஸ் என்னும் இடத்தில் நடக்கிறது பூர்வகுடிகளுக்கான பள்ளி. 

கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்குச் சென்று வருகிறார் சைடின். 

சேறும் சகதியும் நிறைந்த சாலை.. வழியில் வனவிலங்குகளின் தொந்தரவு. 

இவற்றையெல்லாம் மீறிப் பயணம் செய்து பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டி வருகிறார் இவர். 

பள்ளிக்கூடம் உள்ள ஊரில் மின்சாரம் கிடையாது. சூரியசக்தி மின்சாரத்தையே நம்பியிருக்கிறார்கள் பூர்வகுடிகள். 

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி இல்லை. ஆற்றுத் தண்ணீர்தான் எல்லாவற்றுக்கும்.

முக்கியமாகக் கைத்தொலைபேசி வசதி இல்லை. அவசரத்துக்குத் துணைக்கோளத் தொலைபேசி உண்டு.

பாடத்தோடு விளையாட்டுகளையும் பூர்வகுடி மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார் சைடின்.

விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களும் உண்டு என்கிறார் இவர்.

கூச்ச சுபாவமிக்க பூர்வகுடி மக்களோடு நெருங்கிப் பழக, அவர்களின் மொழியையும் கற்றுவருகிறார் சைடின்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்