Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குடிநுழைவு சோதனை நேரத்தைக் குறைக்க முனையும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு சோதனைக்கான நேரத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய பொதுச் சேவை முகப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
குடிநுழைவு சோதனை நேரத்தைக் குறைக்க முனையும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்

(படம்: AFP/Mohd Rasfan)

புத்ராஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு சோதனைக்கான நேரத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய பொதுச் சேவை முகப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மலேசியர்களும் வெளிநாட்டவர்களும் அந்தச் சேவை முகப்பைப் பயன்படுத்தலாம்.

உச்சநேரத்தில் கூட்ட நெரிசலைக் குறைக்க பயணிகளுக்கு வழிகாட்ட சேவைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பயணிகளுக்கு வழிகாட்ட சேவை முகப்புகளில் கடந்த செப்டம்பர் மாதம் உதவி விளக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன.

அத்தகைய முயற்சிகள் பயணிகள் வரிசையில் நிற்கும் நேரத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாள்தோறும், பயணிகள் வருகை தளத்தில் 30 சேவை முகப்புகளையும், புறப்படும் தளத்தில் 10 சேவை முகப்புகளையும் செயல்படுத்த விமான நிலையம் கடப்பாடு கொண்டுள்ளது.

பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த மின்னிலக்கக் கட்டமைப்பை சோதனையிட்டு வருவதாகவும் கோலாலம்பூர் விமான நிலையம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்