Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆடவர்கள் ஆற்றுக்குள் குதித்து மரணம்

மலேசியாவின் கெடா மாநிலத்தில், அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய 5 ஆடவர்களின் சடலங்கள், ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் கெடா மாநிலத்தில், அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய 5 ஆடவர்களின் சடலங்கள், ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஐவர், சேவல் சண்டை சூதாட்டக் கும்பலை சேர்ந்தவர்கள் என்று New Straits Times நாளேடு தெரிவித்தது. அந்தக் கும்பல், மலேசியாவின் வடக்குப் பகுதியில் ஆகப் பெரியது எனக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை, Tanah Licin என்ற ஊரிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சூதாட்டக் கூடத்தை அதிகாரிகள் இரவு நேரத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுமார் 200 பேர் இருந்தனர்.

மொத்தம் 76 பேர் கைது செய்யப்பட்டதாகவும் 40 சேவல்கள், 140,000 ரிங்கிட் ( 47,100 வெள்ளி) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மணல் சுரங்கப் பகுதியாக இருந்த சுங்கை மூடா ஆறு, 40 மீட்டர் ஆழம் எனச் சொல்லப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்