Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: தேசிய விலங்கியல் தோட்டத்தில் புதிய ராட்சதப் பாண்டாக் குட்டி

மலேசியாவின் தேசிய விலங்கியல் தோட்டத்தில் ராட்சதப் பாண்டாக் குட்டி ஒன்று புதிதாய்ப் பிறந்துள்ளது. சீனாவிலிருந்து கடனாகப் பெறப்பட்டுள்ள ராட்சதப் பாண்டா ஜோடிக்குப் பிறந்துள்ள இரண்டாவது குட்டி அது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் தேசிய விலங்கியல் தோட்டத்தில் ராட்சதப் பாண்டாக் குட்டி ஒன்று புதிதாய்ப் பிறந்துள்ளது. சீனாவிலிருந்து கடனாகப் பெறப்பட்டுள்ள ராட்சதப் பாண்டா ஜோடிக்குப் பிறந்துள்ள இரண்டாவது குட்டி அது.

சீனா, "பாண்டா அரசதந்திர முயற்சியின்" கீழ் தனது நட்பு நாடுகளுக்குப் பாண்டாக்களை அனுப்பி அவற்றின் இனவிருத்திக்கும் பாதுகாப்புக்கும் உதவுகிறது.

குட்டியின் தாய், விலங்குத் தோட்டக் காப்பாளர்களை நெருங்க விடாததால் அந்தக் குட்டியைச் சோதனைக்கு எடுத்துச்சென்று அது ஆணா, பெண்ணா என்பதை இன்னும் உறுதிசெய்ய இயலவில்லை.
குட்டிக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

குட்டியின் தமக்கையான "நுவான் நுவான்" என்ற பாண்டா ஆகஸ்ட் 2015இல் பிறந்தது. கடந்த நவம்பரில் அது சீனாவுக்கு அனுப்பப்பட்டது.
சீனாவுடனான ஒப்பந்தத்தின்படி குட்டிகளுக்கு இரண்டு வயதாகும்போது அவை சீனாவுக்குத் திரும்ப அனுப்பப்படுகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்