Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குத் தயார் : தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்

வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குத் தயார் : தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்

வாசிப்புநேரம் -

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

புத்தாண்டு உரையில் அவர் அதனைத் தெரிவித்தார்.

தென்கொரியா, வடகொரியாவுடன் எந்த நேரமும் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராய் இருப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்க அதிபராகத் திரு. ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் அந்நாட்டுடன் உறவுகளை வலுப்படுத்தப்போவதாகத் திரு. மூன் கூறினார்.

புதிய தலைமைத்துவம், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் தடைப்பட்டு நிற்கும் பேச்சுவார்த்தையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தமது நாட்டின் மீதான சில தடைகள் நீக்கப்பட்டாலும், தாம் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அதிபர் மூனின் புத்தாண்டு உரைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு திரு. கிம் அந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அமெரிக்காவை ஆகப்பெரிய எதிரி என்று கூறிய
திரு. கிம், தமது அணுவாயுதத் திட்டத்தை விரிவுபடுத்தவிருப்பதாகக் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்