Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

20 ஆண்டுக்கும் மேல் சிங்கப்பூர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிய மலேசியர் மீண்டும் பிடிபட்டார்

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பிடிபட்ட சிவா இன்று நீதிமன்றத்தில் குற்றங்களை ஒப்புக்கொண்டார். 

வாசிப்புநேரம் -


குடிநுழைவுக் குற்றங்கள் புரிந்த 46 வயது மலேசியர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் உதவியோடு கடந்த ஆண்டு, சிவகுமார் ராமச்சந்திரன் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சட்டத்துக்குப் புறம்பாகச் சிலரை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குள் கொண்டுசெல்வதற்கு அவர் சதித்திட்டம் போட்டிருக்கிறார்.

குடிநுழைவுச் சோதனைச் சாவடி வழியே, அத்தகையோரை அனுமதிக்க, பாதுகாப்பு அதிகாரிக்கு லஞ்சமும் கொடுத்திருக்கிறார்.

சிவாவிற்கு 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சிவா தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்து விசாரணைக்குக் காத்திருந்த வேளையில் பிணையில் இருந்தார்.

1999ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் வேறொரு பெயரில் சிங்கப்பூரை விட்டு மலேசியாவுக்குத் தப்பிச்சென்றார்.

2000 ஆண்டு மார்ச் 9ஆம் தேதி கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பிடிபட்ட சிவா இன்று நீதிமன்றத்தில் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்