Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஐ.எஸ் சந்தேக நபர்கள் 10 பேர் மலேசியாவில் கைது

ஐ.எஸ் பயங்கரவாதப் பிரிவினருக்கு உதவி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 10 பேரை மலேசியா கைதுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் சந்தேக நபர்கள் 10 பேர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர் நகரக்காட்சி. (படம்: AFP)

ஐ.எஸ் பயங்கரவாதப் பிரிவினருக்கு உதவி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 10 பேரை மலேசியா கைதுசெய்துள்ளது. பயங்கரவாதிகள் சபாவில் இருந்து ஃபிலிப்பின்ஸூக்குள் நுழைவதற்கு அவர்கள் உதவி செய்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து
இந்த மாதம் ஆறாம் தேதிவரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் ஒன்பது ஆடவரும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஏழு பேர் பிலிப்பின்ஸைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய மூன்று பேர் மலேசியர்கள்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணையில் அபு சயாஃப் பிரிவினர் சபாவில் பயங்கரவாதப் பிரிவை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டது தெரிய வந்தது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதப் பிரிவில் சேர்வதற்குத் திட்டமிட்டிருந்த 34 வயது மலேசியரைச் சிங்கப்பூர் அதிகாரிகள் ஜனவரி 18-ம் தேதி கைதுசெய்தனர் என்று மலேசியக் காவல் துறையினர் கூறினர்.

அந்த ஆடவர் முகமது நூர் ஹனிஃப் அப்துல் ஜலில் என மீடியாகார்ப் அறிகிறது. கட்டுப்பாடுமிக்க சாங்கி விமானச் சரக்குப் போக்குவரத்து நிலையத்திற்குள்
நுழைவதற்கு அவர் செய்து வந்த வேலை அவருக்கு இயல்பான அனுமதியை வழங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்