Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் புதிய சொகுசு வீட்டுத் தொகுதிகளைக் கட்டவிருக்கும் டிரம்ப் குழுமம்

திரு. டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருப்பதால் அவரது குடும்ப நிறுவனம் 'நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்' வர்த்தக ஒப்பந்தங்களை இழந்திருப்பதாக அவருடைய மகன் டோனல்ட் டிரம்ப் ஜூனியர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -

திரு. டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருப்பதால் அவரது குடும்ப நிறுவனம் 'நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்' வர்த்தக ஒப்பந்தங்களை இழந்திருப்பதாக அவருடைய மகன் டோனல்ட் டிரம்ப் ஜூனியர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

டிரம்ப் குழுமம், உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக டிரம்ப் ஜூனியர் Times of India நாளிதழிடம் கூறினார்.

ஆயினும், அவர் தமது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி, சொகுசு அடுக்குமாடி வீடுகளை விளம்பரப்படுத்த இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்.

ஹரியானாவிலுள்ள குருகிராம் நகரில் வீடுகள் கட்டப்படுவது திட்டம். 47 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் 250 வீடுகள் அமையும்.

2023-ஆம் ஆண்டுக்குள் அவை கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரு. டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருப்பதால் அவரது குடும்ப நிறுவனம் 'நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்' வர்த்தக ஒப்பந்தங்களை இழந்திருப்பதாக அவருடைய மகன் டோனல்ட் டிரம்ப் ஜூனியர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

டிரம்ப் குழுமம், உலகம் முழுவதிலிருந்தும் கிடைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தட்டிக்கழிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக டிரம்ப் ஜூனியர் Times of India நாளிதழிடம் கூறினார். அவர் தமது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி, சொகுசு அடுக்குமாடி வீடுகளை விளம்பரப்படுத்த இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார்.

ஹரியானாவிலுள்ள குருகிராம் நகரில் வீடுகள் கட்டப்படுவது திட்டம். 47 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடங்களில் 250 வீடுகள் அமையும். 2023-ஆம் ஆண்டுக்குள் அவை கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்