Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தீர்வை செலுத்தப்படாத சுமார் 70,000 பீர் போத்தல்களை கண்டுபிடித்த சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள்

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள், தீர்வை செலுத்தப்படாத சுமார் 70,000 பீர் போத்தல்களை கண்டுபிடித்துள்ளனர். அந்த பானங்கள் பழச்சாறு என்று வகைப்படுத்தப்பட்டிருந்ததாக சுங்கத்துறை சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் இருந்த கொள்கலனில் திங்கட்கிழமை தீர்வை செலுத்தப்படாத பீர் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆணையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட பீர் போத்தல்களுக்குச் செலுத்தவேண்டிய தீர்வை சுமார் 86,580 வெள்ளி. அவற்றுக்கான பொருள், சேவை வரி 20,140 வெள்ளி. சிங்கப்பூர் சுங்கத்துறை அதன் தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்