Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டாக்டர் மகாதீருக்கு எதிராக 300 பேர் ஆர்ப்பாட்டம்

மலேசியாவில் எந்நேரமும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், அங்கே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னைய பிரதமர் மகாதீர் முகமது நிறுவிய 'பெர்சாத்து' கட்சியில் முறைகேடு இருப்பதாகக் கூறி சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாசிப்புநேரம் -
டாக்டர் மகாதீருக்கு எதிராக 300 பேர் ஆர்ப்பாட்டம்

(படம்: Olivia Harris/Reuters)

மலேசியாவில் எந்நேரமும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், அங்கே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னைய பிரதமர் மகாதீர் முகமது நிறுவிய 'பெர்சாத்து' கட்சியில் முறைகேடு இருப்பதாகக் கூறி சுமார் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'பெர்சாத்து' கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், கட்சியின் இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். அவர்கள் இன்று கட்சிகளுக்கான பதிவகத் தலைமையகத்தில் கூடினர்.

கட்சியின் விதிமுறை பலமுறை மீறப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் சர்வாதிகாரியைப் போல் நடந்துகொள்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். அவருக்கு பதிலாக மலேசியாவின் முன்னைய துணைப்பிரதமர் முஹைதீன் யாசினைப் பிரதமர் வேட்பாளராக நியமனம் செய்யக்கோரும் பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

அவர்களுக்கு அம்னோவின் ஆதரவு இருப்பதாகவும் இது ஒரு சதி நடவடிக்கை என்றும் பெர்சாத்து கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

ஆர்ப்பாட்டம் நடத்துவோரில் பெரும்பாலோர் யார் என்பதே தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறினர். வரும் தேர்தலில் பெர்சாத்து கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதே ஆர்ப்பாட்டக்காரர்களின் இலக்கு என்று பெர்சாத்து தலைவர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்