Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1900ஆம் ஆண்டில் - 100,000 புலிகள், தற்போது 3,900 புலிகள் மட்டுமே !

இந்த நூற்றாண்டில் இதுவரை 2,300க்கு மேற்பட்ட புலிகள் கடத்தலுக்காகவும் வேட்டைக்காகவும் கொல்லப்பட்டன என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.

வாசிப்புநேரம் -
1900ஆம் ஆண்டில் - 100,000 புலிகள், தற்போது 3,900 புலிகள் மட்டுமே !

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்த நூற்றாண்டில் இதுவரை 2,300க்கு மேற்பட்ட புலிகள் கடத்தலுக்காகவும் வேட்டைக்காகவும் கொல்லப்பட்டன என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.

CITES எனப்படும் அருகிவரும் உயிரினங்கள் மீதான அனைத்துலக வர்த்தக உடன்படிக்கை பற்றிய மாநாடு ஜெனிவாவில் நடைபெறுவதை முன்னிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆண்டிற்குச் சுமார் 120 புலிகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படும்போது பிடிபடுவதாகக் கூறப்படுகிறது.

2000ஆம் ஆண்டிற்குப் பிறகு புலிகளின் எண்ணிக்கை விரைவாகக் குறையத் தொடங்கின.

1900களில் உலகில் 100,000க்கும் மேற்பட்ட புலிகள் வாழ்ந்தன.

2010-இல் அந்த எண்ணிக்கை 3,200 க்குக் குறைந்தது.

தற்சமயம், நிலைமை சற்றே மேம்பட்டு, எண்ணிக்கை 3,900 என்று இருக்கிறது.

புலிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்கு உடனடி நடவடிக்கை தேவை என்று அறிக்கை கேட்டுக்கொள்கிறது.

புலிகள் அவற்றின் தோலுக்காகவும் உடற்பாகங்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.

தென்கிழக்காசியாவில் தான் புலிகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்