Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியத் தேர்தல் 2018 - தெரிந்துகொள்ளலாமே!

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மலேசியப் பொதுத்தேர்தல் குறித்த சில தகவல்களை நீங்கள் அன்றாடம் செய்தி இணையவாசலில் தெரிந்துகொள்ளலாம்.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மலேசியப் பொதுத்தேர்தல் குறித்த சில தகவல்களை நீங்கள் அன்றாடம் செய்தி இணையவாசலில் தெரிந்துகொள்ளலாம்.

இழுபறி நிலைக்கு உள்ளாகக் கூடிய சில மாநிலங்கள் குறித்து அடுத்த சில நாட்கள் பார்ப்போம்.

கிளந்தான்:

-பழைமைவாத முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலம்.

-மக்கள்தொகையில் சுமார் 94% முஸ்லிம்கள்.

- மலேசியாவில் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலம்.

-மலேசியாவின் ஆக ஏழ்மையான மாநிலமும் கூட.

-27 ஆண்டுகளாகப் பாஸ் (PAS) கட்சி வசம் உள்ள மாநிலம்.

-சென்ற பொதுத்தேர்தலில் கைப்பற்றிய நாடாளுமன்ற இடங்கள் - பாஸ் கட்சி - 8, PKR - 1, தேசிய முன்னணி - 5.

- பாஸ் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சியிலிருந்து பிரிந்து சென்று அமானா நெகாரா என்ற கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

-அமானா நெகாரா தற்போது எதிர்த்தரப்புப் பக்கத்தான் ஹரப்பான்  கூட்டணியில் இணைந்துள்ளது.

பாஸ் கட்சிக்குப் பாதகமான அம்சங்கள்:

-அமானா நெகராவால் வாக்குகள் பிரிய வாய்ப்பு.

- 2015-ஆம் ஆண்டு பாஸ் கட்சியின் பிரபல சமயத் தலைவர் நிக் அஸிஸ் நிக்மாட் காலமானார்.

-2014 ஏற்பட்ட கடுமையான வெள்ளம் - அதிலிருந்து மீளத் தவித்தனர் மக்கள்

-மோசமான பொருளியல்

-அம்னோ தொடங்கியிருக்கும் 572 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வெள்ளப் பாதுகாப்புத் திட்டம்.

எங்கள் தேடல் பக்கத்தில் 'மலேசியத் தேர்தல்' என்று தட்டச்சு செய்து, அது தொடர்பான அனைத்துச் செய்திகளையும் பார்க்கலாம்.

 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்