Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் புது விதமான 3 கொரோனா கிருமி வகைகள் கண்டுபிடிப்பு

தென் கொரியாவில் புது விதமான 3 கொரோனா கிருமி வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில் புது விதமான 3 கொரோனா கிருமி வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தத் தகவலை, Yonhap செய்தி நிறுவனம் வெளியிட்டது.

புது வகையான கிருமிகள், பாகிஸ்தானில் இருந்து வந்த இருவரிடமும், உஸ்பெக்கிஸ்தானில் இருந்து வந்த ஒருவரிடமும் அடையாளம் காணப்பட்டன.

அவர்கள் மூவரும், தென் கொரியாவுக்குச் சென்றதிலிருந்தே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாரையும் அவர்கள் தொடர்புகொள்ளவில்லை.

புதிததாக அடையாளம் காணப்பட்ட கொரோனா கிருமி மற்ற கொரோனா கிருமிகளைக் காட்டிலும் மரபணு ரீதியாக மாறுபடுகிறது.

அதுபற்றி ஆராய்ந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

உருமாற்றமடைந்துள்ள கிருமியால், தற்போதைய சோதனைமுறை மாறாது என நிபுணர்கள் கூறினர்.

ஆனால், கிருமி தொற்றும் இயல்பில் ஏதும் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை அணுக்கமாய்க் கண்காணிக்கப் போவதாக அவர்கள் கூறினர்.

தென்கொரியாவில் COVID-19 நோயால்
14,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்