Images
  • malaysia car
    (படம்: Bernama)

மலேசியா: சாலை விபத்தில் 3 சகோதரிகள் பலி

மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் நேர்ந்த வாகன விபத்தில், மூன்று சகோதரிகள் மாண்டனர்.

நேற்று நடந்த விபத்தில் 23 வயது பெண் தமது இரண்டு சகோதரிகளுடன் Perodua Myvi காரை ஓட்டிச் சென்றார்.

Proton Wira கார் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல தடம் மாற முயன்றபோது, எதிரே வந்த அந்தச் சகோதரிகள் பயணம் செய்த காருடன் மோதியது.

சகோதரிகளில் ஆக இளையவரான 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

21 வயதான மற்றொரு சகோதரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவர்களின் காரை மோதிய Proton Wira காரின் 21 வயது ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மயக்கநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூன்று சகோதரிகளும் உறவினர் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

Top