Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாம்: 300கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல்

வியட்நாமிய அதிகாரிகள் சுமார் 300 கிலோ கிராம் அளவிலான Methamphetamine போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வியட்நாம்: 300கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல்

(படம்: AFP/TIM SLOAN)

வியட்நாமிய அதிகாரிகள் சுமார் 300 கிலோ கிராம் அளவிலான Methamphetamine போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

ஹா டின் (Ha Tinh) வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

வியட்நாமில் போதைப் பொருள் தொடர்பில் கடுமையான சட்டம் நடப்பில் உள்ளது.

இருப்பினும், மியன்மார், தாய்லந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் Golden Triangle பகுதியிலிருந்து வியட்நாமிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுகிறது.

Methamphetamine போன்ற போதைப்பொருள்கள் தூளாகவும் மாத்திரையாகவும் தயாரிக்கப்படுகின்றன. அவை வியட்நாமிய இளையர்களிடையே பிரபலமாக உள்ளன.

அண்மைக் கடத்தல் சம்பவத்தின் தொடர்பில் லாவோஸைச் சேர்ந்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்