Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நாளொன்றுக்கு 40 காசில் வாழும் மாணவி

நாளொன்றுக்கு 2 யுவெனில் (40 காசு) வாழ்ந்துகொண்டிருந்த 24 வயது மாணவியின் நிலையறிந்து பலர் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
நாளொன்றுக்கு 40 காசில் வாழும் மாணவி

(படம்: Reuters)

நாளொன்றுக்கு 2 யுவெனில் (40 காசு) வாழ்ந்துகொண்டிருந்த 24 வயது மாணவியின் நிலையறிந்து பலர் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த வூ ஹுவாயான் (Wu Huayan) என்ற அந்தப் பெண் சுமார் 5 ஆண்டுகாலமாக நாளொன்றுக்கு 2 யுவென் மட்டுமே கொண்டு வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

பெற்றோர் இல்லாத அவர், மனநலம் குன்றிய தனது தம்பியைப் பார்த்துக்கொள்ளப் போராடி வருகிறார்.

ஒவ்வொரு மாதமும், உறவினர்களால் வழங்கப்படும் 300 யுவெனை (77 வெள்ளி), தமது தம்பியைப் பார்த்துக்கொள்ளப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார் அந்த மாணவி.

இதனால், எஞ்சியுள்ள பணத்தில் ஒழுங்கான உணவைக் கூடச் சாப்பிடமுடியாத அவர் சத்துக்குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

20 கிலோகிராம் எடையை மட்டுமே கொண்ட வூ, கடந்த மாதத் தொடக்கத்தில் திடீரென்று சுவாசிக்கச் சிரமப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இதயம், சிறுநீரகம் ஆகியவற்றில் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.

அவரின் கதை பின்னர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

வூ-விற்குச் சுமார் அரை மில்லியன் யுவென் (சுமார் $96,500) நன்கொடை திரட்டப்பட்டது.

அவருக்கு அவசரகால உதவித்தொகையாக சீன அரசாங்கம் 20,000 ($3,860)யுவென் வழங்கியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்