Images
  • Huawei-1
    படம்: Reuters/Charles Platiau

5G திட்டங்களை அறிமுகம் செய்வது குறித்து Huawei-யுடன் மலேசிய Maxis நிறுவனம் உடன்பாடு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைபேசிக் கட்டமைப்பு நிறுவனமான Maxis, சீனாவின் Huawei Technologies நிறுவனத்துடன் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்பம் சந்தைக்கு வரும்போது அதனை அறிமுகப்படுத்தத் திட்டமிடுகிறது Maxis.

மலேசிய அரசாங்கம், அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பை நிறுவ இலக்கு கொண்டுள்ளது.

தேசிய அளவில் 5G திட்டங்கள் தொடர்பான செய்முறை விளக்கக் கூட்டங்கள் இம்மாதத்தில் தொடங்கவிருக்கின்றன.

ஆசியாவில் ஐந்தாம் தலைமுறைக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் முதல் நாடு என்ற சிறப்பைப் பெறுவதற்கான பணிகள் நடைபெறுவதாக, மலேசியாவின் தொடர்பு, பல்லூடக அமைச்சர் Gobind Singh Deo கூறினார்.

Huawei-குறித்து அமெரிக்கா முன்வைத்த வேவுக் குற்றச்சாட்டுகள் பற்றிக் கவலைப்படவில்லை என்று மலேசியா கூறுகிறது.

Huawei பொருள்கள் கட்டுப்படியான விலையில் கிடைக்குமா என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாய் மலேசியா குறிப்பிட்டது.

Top