Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா : மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் வெள்ளத்தில் சிக்கி மரணம்

மலேசியாவின் கிளந்தான், கோலா திரங்கானு வெள்ளத்தில் 7 வயதுச் சிறுவன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -


மலேசியாவின் கிளந்தான், கோலா திரங்கானு வெள்ளத்தில் 7 வயதுச் சிறுவன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாசிர் புட்டே பகுதியில் நெல் வயல் ஒன்றில் முகமது இல்ஹாம், ஹஸ்மாடியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.

உறவினருடன் நேற்று மாலை மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் பாலத்திலிருந்து வழுக்கி, கால்வாய்க்குள் விழுந்ததாய்க் கூறப்பட்டது.

அங்கிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அவனது உடலைத் தேடல் மீட்புக் குழுவினர் இன்று காலை கண்டுபிடித்தனர்.

கிளந்தானில் 7 மாவட்டங்களுக்கு நேற்று வானிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஒரு நாளில் பெய்யும் மழையின் அளவு 240 மில்லிமீட்டரைத் தாண்டினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும்.

காலை 7 மணி நிலவரப்படி கிளந்தானில் 5,600க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின.

நேற்றிரவு அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்