Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் கலவரங்களில் 72 பேர் காயம்

ஹாங்காங்கில் நேற்று வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததில் குறைந்தது 72 பேர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் கலவரங்களில் 72 பேர் காயம்

படம்: REUTERS/Thomas Peter

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஹாங்காங்கில் நேற்று வன்முறைமிக்க கலவரங்கள் வெடித்ததில் குறைந்தது 72 பேர் காயமடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று ஹாங்காங் உச்ச விழிப்பு நிலையில் இருக்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சீனாவுக்கு வழக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்படுவதை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாவை எதிர்த்து, அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அந்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு இன்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றக் கட்டடத்தைச் சென்று சேருவதைத் தடுக்க அந்த வளாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்து, போக்குவரத்தை மறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் மசோதாவுக்கான இரண்டாம் வாசிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் சாலைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கலைக்க, கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள், மிளகு புகை போன்றவற்றைக் காவல்துறை பயன்படுத்தியது.

ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக வெடித்ததால், அதிகாரிகள் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதை ஹாங்காங் காவல்துறை தலைவர் உறுதிப்படுத்தினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்