Images
  • couples-1
    படங்கள்: Reuters/Lim Huey Teng

மலேசியா: ஒரே நாளில் மணமுடித்த 99 ஜோடிகள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கோலாலம்பூரின் தியென் ஹோ கோவிலில் 99 ஜோடிகள் இன்று மணமுடித்தனர். 

இன்றைய தினம் ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாவது நாள். உள்ளூர்ச் சீனர்கள் அதனை மங்கலகரமான நாளாகக் கருதுகின்றனர்.


சீன மொழியில் ஒன்பது என்ற சொல்லை உச்சரிக்கும்போது 'நீடு வாழ்க' என்ற சொல்லுடன் ஒத்துப் போவது அந்த நம்பிக்கைக்கான காரணம்.


கறுப்பு, வெள்ளை ஆடைகளில் ஜோடிகள் எழிலாகப் பவனி வந்தனர். ஒருசிலர் சிவப்புநிற ஆடைகளை அணிந்திருந்தனர்.

மலர்ச் செண்டுகளை ஏந்தியவாறு ஜோடிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆசி பெற்றுக்கொண்டனர்.


Top