Images
  • china lab
    படம்: AFP 

கொள்ளை நோய்ப்பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மருந்தைக் கண்டுபிடித்ததாகக் கூறும் சீனா

சீனாவின் ஆய்வகம் ஒன்று COVID-19 கிருமித்தொற்றுக்கு முடிவுகட்டும் புதிய மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Peking பல்கலைக்கழகத்தில் சோதனை செய்யப்படும் மருந்து, நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக குணமடைய வைப்பது மட்டுமில்லாமல், குறுகிய காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதாகக் கூறப்பட்டது.

எலிகளிடம் செய்யப்பட்ட முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்ததாய்க் கூறப்பட்டது.

குணமடைந்த சுமார் 60 பேரின் உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு அணுக்களைக்கொண்டு கிருமி மற்ற அணுக்களைப் பாதிப்பது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மருந்தை உருவாக்க ஆய்வுக் குழு அல்லும் பகலும் வேலை செய்ததாக AFP செய்தி நிறுவனத்திடம் கூறப்பட்டது.

சுமார் 4.8 மில்லியன் பேரைப் பாதித்து, 315,000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட நோய்க்கான மருந்து இவ்வாண்டின் பிற்பாதியில் தயாராகிவிடும் என்று குறிப்பிடப்பட்டது.

குளிர் காலத்தல் கிருமித்தொற்று மீண்டும் தலையெடுக்கும் முன் அது தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Top